அதிரவைக்கும் ஆபாச படம்... சிக்க போகும் நடிகைகள் யார்?

செயலி மூலம் ஆபாசப்படம் ஒளிப்பரப்பிய விவகாரத்தில் தொடர்புடைய நடிகைகளுக்கு மும்பை க்ரைம் பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 • Share this:
  தொழிலதிபரும் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா, மும்பையில், JL STREAM என்ற பெயரில் செயலி நடத்தி வருகிறார்; இதன் மூலம் படங்கள், வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன கட்டணம் செலுத்தி பார்க்கப்படும் HOTSHOT என்ற செயலியில், ஆபாசப் படங்கள் ஒளிபரப்பப்படுவதாக வந்த புகாரை அடுத்து

  மும்பை போலீசார், கடந்த பிப்ரவரி மாதம், மாடலும் நடிகையுமான கெகனா வசிஷ்ட், ஆபாசப் படத் தயாரிப்பாளர் உமேஷ் காமத், கேமராமேன் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர் அவர்கள் அளித்த தகவலின்படி, இதன் பின்னணியில் இயங்கி வந்த தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை கடந்த வாரம் மும்பை போலீசார் கைது செய்தனர்.

  மும்பை போலீசார் நடத்திய விசாரணையில், இந்த ஆபாசப் பட ஒளிபரப்பு எப்படி நடந்தது என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர் ராஜ்குந்த்ரா தனது உறவினரான பிரதீப் பட்சி மூலமாக லண்டனில் KENRIN என்ற பெயரில் வீடியோ தயாரிப்பு நிறுவனம் ஓன்றை நடத்திவந்துள்ளதும் அதன் மூலம் ஆபாச படங்களை பதிவேற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

  Also Read : நடிகைகளை விருந்தாக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன் - தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்

  இந்நிலையில் விவகாரத்தில் தொடர்புடைய மற்றும் ஆபாச வீடியோக்களில் நடித்த நடிகைகளுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ராஜ்குந்த்ராவின் செல்போனை கைபற்றியுள்ள போலீசார் அதில் இருந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரபல நடிகை ஷேர்லின் சோப்ராவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். நடிகை ஷேர்லின் சோப்ரா ,ராஜ்குந்த்ராவிற்கு பல நடிகைகளை அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவருக்கும் இந்த விவகாரத்தில் முக்கிய தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  Also Read : ஆபாச பட விவகாரம்: கணவருடன் வாக்குவாதம் கண்ணீர்விட்டு அழுத ஷில்பா ஷெட்டி

  நடிகை ஷேர்லின் சோப்ரா கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் மும்பை முதன்மை நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். ராஜ்குந்த்ராவின் தனிப்பட்ட செயலாளரான உமேஷ் காமத்,உதவியாளர் ரியான் தார்ப் ,உள்ளிட்ட நான்கு பேர் கைதாகியுள்ள நிலையில் தற்போது நடிகைகளை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: