Home /News /entertainment /

கேன்ஸ் விருது வென்ற இந்திய ஆவணப்படம் ஆல் தட் ப்ரீத்ஸ்

கேன்ஸ் விருது வென்ற இந்திய ஆவணப்படம் ஆல் தட் ப்ரீத்ஸ்

ஆல் தட் ப்ரீத்ஸ்

ஆல் தட் ப்ரீத்ஸ்

இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  • News18
  • Last Updated :
    சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில்  இந்தாண்டு இந்திய ஆவணப்படமான ஆல் தட் ப்ரீத்ஸ் விருதை வென்றுள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாவான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா இந்தாண்டு பிரான்சில் உள்ள கேன்சில் நடைபெற்றது. மே 17-ஆம் தேதி துவங்கி 28-மே 2022 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

    இந்த திரைப்பட விழாவில் விருது பெறும் படங்களை தேர்வு செய்ய நடுவர் குழு உண்டு. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கலாச்சார பங்களிப்பை மனதில் கொண்டு தேர்வு செய்யப்படுவர். இந்த வருடம் தீபிகா படுகோன் எட்டு நடுவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பத்மாவத் படத்தின் போது அவருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவராக நடித்தது, ஹாலிவுட் படங்களில் தலைகாட்டியது ஆகியவற்றை வைத்து அவரை நடுவர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளனர்.

    இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலகநாயகன் கமல் ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன், தமன்னா, பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் போன்ற பலர் சிவப்பு கம்பளத்தின் மூலம் வரவேற்க பட்டனர். கேன்ஸ் நிகழ்ச்சியில் பல இந்திய திரைப்படங்கள் திரையிடபட்டது.

    இந்த வருடம் சௌனாக் சென்னின் ஆவணப்படமான ஆல் தட் ப்ரீத்ஸ் சிறந்த டாக்குமெண்ட்ரி பிரிவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்தது. இது கான் திரைப்பட போட்டிப்பிரிவு அல்ல. பல தனியார் அமைப்புகள் இங்கு விருது வழங்குகின்றன. அந்தப் பிரிவில்தான் இது போட்டியிட்டது.

    Also read... கான் திரைப்பட விழா - கற்பிதங்களும் உண்மையும்

    இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான கோல்டன் ஐ (Golden Eye) விருதை தட்டி சென்றது ஆல் தட் ப்ரீத்ஸ். டெல்லி நகரின் மாசடைந்த காற்று மற்றும் சீரழிந்து வரும் சமூக கட்டமைப்புக்கு மத்தியில், நாடு கடந்து வரும் பருந்துகளை காப்பாற்றும் சகோதர்களை பற்றி இந்த ஆவண படம் அமைந்திருந்தது. தற்போது திரைத்துறையினர் பலர்  சௌனாக் சென்னின்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி