Home /News /entertainment /

சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு 'ஏ' சான்றிதழ்...

சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு 'ஏ' சான்றிதழ்...

சாந்தனு

சாந்தனு

Shanthnu Murungaikkai Chips Movie : முருங்கைக்காய் சிப்ஸ் படம் டிசம்பர் 10 திரைக்கு வருகிறது.

சாந்தனு பாக்யராஜ் நடித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க அனுமதியில்லை என்று வழங்கப்படும் 'ஏ' சான்றிதழ் அபூர்வமானதில்லை. அவ்வப்போது படங்களுக்கு கிடைப்பதுதான். சாந்தனு, ஜீ.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களின் படங்களுக்கு அப்படியொரு சான்றிதழ் கிடைப்பதுதான் ஆச்சரியம்.

டிசம்பர் 3 வெளியான ஜீ.வி.பிரகாஷின் பேச்சிலர் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினர். அதற்கேற்ப படத்தில் அடல்ட் கன்டென்ட் அதிகமிருந்தது. அதிகமிருந்தது என்ன.. படத்தின் கன்டென்டே அப்படியானதுதான். அதேநேரம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பலமுறை தள்ளிப்போன சாந்தனு, அதுல்யா ரவி நடித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படம் டிசம்பர் 10 திரைக்கு வருகிறது. தமிழ் சினிமாவில் முருங்கைக்காய்க்கு தனி இடம் பெற்றுத் தந்தவர் பாக்யராஜ். அவரது முந்தானை முடிச்சுப் படத்தில் முருங்கைக்காயை வைத்து அடல்ட் காமெடி செய்திருப்பார்.

also read : மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுக்காக திரையிடப்பட்ட மாநாடு - படங்கள்

அதையே படத்தின் தலைப்பாக்கியதால் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதனை இந்த 'ஏ' சான்றிதழ் உறுதி செய்திருக்கிறது. திரைக்கதை மேதை பாக்யராஜின் மகனான சாந்தனு பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் தனி ஹீரோவாக ஒரு வெற்றியும் அவருக்கு அமையவில்லை. இந்தப் படத்திலாவது அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முந்தானை முடிச்சு ஜோடிகளான பாக்யராஜும், ஊர்வசியும் இந்தப் படத்தில் இருக்கிறார். கூடவே யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். அடல்ட் காமெடியை எதிர்பார்ப்பவர்கள் முருங்கைக்காய் சிப்ஸை பார்க்கலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Athulya Ravi

அடுத்த செய்தி