ஷாந்தனு இயக்கிய குறும்படத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு..!

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கும் ஷாந்தனு அந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

  • Share this:
ஊரடங்கு காலத்தில் ஷாந்தனு இயக்கிய குறும்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் நட்சத்திர ஜோடி ஷாந்தனு - கீக்கி விஜய். இவர்கள் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, முதல் வீடியோவாக கொஞ்சம் கொரோனா, நிறைய காதல் என்ற குறும்படத்தின் டீசரை வெளியிட்டிருந்தனர்.

தற்போது இந்தக் குறும்படம் வெளியாகியுள்ளது. வீட்டில் அனைத்து நேரங்களிலும் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இக்குறும்படம் அமைந்துள்ளது.


குறும்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஷாந்தனு, சாதாரணமான முயற்சி தான், அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இக்குறும்படம் ஐஃபோனில் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறும்படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் ஷாந்தனு - கீக்கி விஜய் ஜோடியை பாராட்டி வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறும்படத்தைக் குறிப்பிட்டு சூப்பர் மச்சி என்று கூறியுள்ளார்.
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading