Home /News /entertainment /

Thalapathy Vijay: விஜய்யுடனான ஸ்பெஷல் படத்தைப் பகிர்ந்த சாந்தனு... பின் கதை என்ன தெரியுமா?

Thalapathy Vijay: விஜய்யுடனான ஸ்பெஷல் படத்தைப் பகிர்ந்த சாந்தனு... பின் கதை என்ன தெரியுமா?

விஜய்

விஜய்

டெல்லியில் ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட போகும் போது எடுத்தப்படம் தான் இது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாஸ்டர் படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் தன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவிட்டிருக்கிறார் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த சமயத்தில் தான் இந்தியாவில் கொரோனா தொற்று தலைதூக்க ஆரம்பித்தது. அதனால் 2020 ஏப்ரலில் வெளியாக வேண்டிய இப்படம் 2021 பொங்கலுக்கு வெளியானது.

    கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.

    ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும்... ரவீந்தருக்கு மகாலட்சுமியின் ரொமாண்டிக் போஸ்ட்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    தவிர அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் சாந்தனு பாக்யராஜ். டெல்லியில் ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட போகும் போது எடுத்தப்படம் தான் இது. தற்போது இந்தப் படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Shanthanu, Thalapathy vijay

    அடுத்த செய்தி