பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறத விட குறும்படம் இயக்குவது பெருமைக்குரியது - ஷாந்தனு உருக்கம்

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் இக்குறும்படத்தை அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் யுவஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருந்தார்.

பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறத விட குறும்படம் இயக்குவது பெருமைக்குரியது - ஷாந்தனு உருக்கம்
ஷாந்தனு
  • Share this:
நடிகர் ஷாந்தனு தனது மனைவியுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் தான் இயக்கி நடித்த கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தார்.

வீட்டில் அனைத்து நேரங்களிலும் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இக்குறும்படம் அமைந்திருந்தது. இக்குறும்படத்தை அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் யுவஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருந்தார்.

வீட்டிற்குள்ளேயே ஐபோனை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இக்குறும்படத்தை திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் இக்குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஷாந்தனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, “கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை பலரும் உருவாக்கியிருந்த நிலையில் என் பங்குக்கு நானும் சிறியதாக நல்ல விஷயத்தை பதிவு செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.

பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறத விட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுதுமுன்னு தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்).

ஆனா அது உங்க பேராதரவுனாலயும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம். 

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading