முதலிரவு காமெடி கதையில் சாந்தனு - பாக்யராஜ்!

முதலிரவு காமெடி கதையில் சாந்தனு - பாக்யராஜ்!
பாக்ய்ராஜ் உடன் சாந்தனு, அதுல்யா
  • Share this:
நடிகர் பாக்யராஜ், சாந்தனு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சாந்தனு அடுத்ததாக தனது தந்தையுடன் இணைந்து நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீஜர் இந்தப் படத்தை கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் யோகி பாபு, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், பிராங்க் ராகுல், ராஜு,ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தரண் இசையமைக்கிறார்.

பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறது.மேலும் படிக்க: நடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? சமந்தா வருத்தம்
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading