மணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு!

Web Desk | news18
Updated: July 19, 2019, 8:02 PM IST
மணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு!
நடிகர் சாந்தனு பாக்யராஜ்
Web Desk | news18
Updated: July 19, 2019, 8:02 PM IST
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது.

இந்தப் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்திலும் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது.

இந்நிலையில் அவர் எழுதி தயாரிக்கும் வானம் கொட்டட்டும் படமும் அதே ஸ்டைலில் உருவாகிறது. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் தற்போது சாந்தனுவும், வேலையில்லா பட்டாதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதனும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னை, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.வீடியோ பார்க்க: டிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...