’தல லுக் சூப்பர்னு சொன்னது ஒரு குத்தமா?’ சாந்தனுவுக்கு நேர்ந்த சங்கடம்

சாந்தனு பாக்யராஜ்

சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சாந்தனு நடித்திருந்தார். சாந்தனு விஜய் ஆள் என்று அஜித் ரசிகர்கள் ஏற்கனவே பச்சைக்குத்தி வைத்துள்ளனர்.

 • Share this:
  சமூகவலைதளத்தில் அஜித், விஜய் ரசிகர்களின் ஸ்டார் வார் 24 மணிநேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்க ஆளுதான் டாப் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்வதில் சாந்தனுபோன்ற அமைதி விரும்பிகளும் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.

  சாந்தனு ஒரு ஹாட்கோர் விஜய் ரசிகர் என்பது ஊருக்கே தெரியும். அவரது திருமணத்தில் விஜய்தான் தாலி எடுத்துக் கொடுத்தார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சாந்தனு நடித்திருந்தார். சாந்தனு விஜய் ஆள் என்று அஜித் ரசிகர்கள் ஏற்கனவே பச்சைக்குத்தி வைத்துள்ளனர்.

  இது தெரியாமல், வலிமை படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டு, தல இந்தப் படத்தில் சூப்பர் ஸ்மார்ட் லுக்கில் இருக்கிறார் என்று பதிவு போட, அஜித் ரசிகர்கள், நீங்க விஜய் ஃபேனாச்சே, எதுக்கு எங்க தலையைப் பத்தி பேச்சு என்று கடுப்படித்துள்ளனர். சாந்தனு இதனை எதிர்பார்க்கவில்லை. "ட்விட்டர்ல எது பேசினாலும் தப்பாகுது. நல்லவிதமா சொன்னாலும், தப்பா பொருளாகுது. மக்கள் நான் என்ன சொன்னேனோ அதை திரிச்சிட்டாங்க. என்னோட ட்வீட்டை திரும்ப போஸ்ட் செய்தாலும் பயனில்லை" என்று புலம்பிவிட்டார். ஆனாலும், விமர்சனங்கள் நின்றபாடில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  "ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் அதை யோசிச்சு சொல்லணும் போல. சோஷியல் மீடியா ரொம்ப ஆபத்தானதா மாறிடுச்சி. தல லுக் எனக்குப் பிடிச்சிருக்கு, அவ்வளவுதான்" என்று கடையை சாத்திவிட்டார் சாந்தனு. அவருக்கு தெரியாது, அஜித்தே விஜய்யை பிடிக்கும்னு சொன்னா, அதெப்டி நீங்க சொல்லலாம் என்று அவரையே ட்ரோல் செய்வார்கள் இந்த ரசிகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: