முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெயிலருடன் வெளியாகும் இந்தியன் 2? இயக்குநர் ஷங்கர் போட்டோவுடன் பகிர்ந்த தகவல் - டவுட் கிளப்பும் ரசிகர்கள்

ஜெயிலருடன் வெளியாகும் இந்தியன் 2? இயக்குநர் ஷங்கர் போட்டோவுடன் பகிர்ந்த தகவல் - டவுட் கிளப்பும் ரசிகர்கள்

கமல்ஹாசன் - ஷங்கர்

கமல்ஹாசன் - ஷங்கர்

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதால் ரஜினிகாந்த்தின் ஜெயிலருடன் இந்தியன் 2 வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிப்பில் ஆர்சி 15 ஆகிய படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இதில் இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் நீண்ட நாட்களாக தயாரி்ப்பில் இருக்கிறது. சிக்கல்கள் தீர்ந்து 2022-ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.  தற்போது இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 1 மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தப்படவிருக்கிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் முழுமையாக பங்குபெற கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து படங்களைப் பகிர்ந்து மேற்சொன்ன தகவலை உறுதி செய்திருக்கிறார்.  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதால் ரஜினிகாந்த்தின் ஜெயிலருடன் இந்தியன் 2 வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.  இந்த ஆண்டு இறுதியில் இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Indian 2, Kamal Haasan, Shankar