முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருமணத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த RC 15 குழு... அன்பை உணர்ந்ததாக கியாரா அத்வானி உருக்கம்!

திருமணத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த RC 15 குழு... அன்பை உணர்ந்ததாக கியாரா அத்வானி உருக்கம்!

RC 15 படக்குழு

RC 15 படக்குழு

இயக்குனர் ஷங்கரின் RC 15, ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடிக்கும் ஒரு அரசியல் த்ரில்லர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கியாரா அத்வானிக்கு ஆர்.சி15 படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. 

சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் கடந்த ஒரு வாரமாக பாலிவுட் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்கள். இந்த ஜோடி பிப்ரவரி 12-ம் தேதியான நேற்று மும்பையில் ஒரு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், புதுமணத் தம்பதிகளுக்கு ராம் சரண், இயக்குனர் ஷங்கர் மற்றும் ஆர்.சி 15 படக்குழுவினர் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி பிப்ரவரி 7 ஆம் தேதி ஜெய்சல்மீரில் திருமணம் செய்து கொண்டனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். இதற்கிடையே ராம் சரண், இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒட்டுமொத்த RC 15 குழுவும் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானிக்கு தங்கள் திருமண வாழ்த்தை தெரிவித்து காற்றில் பூக்களை வீசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வீடியோவை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தது.

அதற்கு, ”இது எங்களுக்கு இனிமையான ஆச்சரியம்! அன்பை உணர்கிறேன். மிக்க நன்றி சங்கர் சார், ராம் சரண், தில் ராஜு சார் மற்றும் ஒட்டு மொத்த ஆர்.சி 15 குழுவினருக்கும் நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார் கியாரா அத்வானி.

இயக்குனர் ஷங்கரின் RC 15, ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடிக்கும் ஒரு அரசியல் த்ரில்லர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, நாசர், ரகுபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் ஆர்.சி 15 படத்தில் துணை வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kiara Advani