கவனம் பெறும் ஷங்கர் - ராம் சரண் பட அறிமுக போஸ்டர்!

ஷங்கர் - ராம் சரண் படம்

ரன்வீர் சிங், சிரஞ்சீவி, ராஜமௌலி ஆகியோர் ஷங்கர் - ராம் சரண் படத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 • Share this:
  இயக்குநர் ஷங்கர் - தெலுங்கு நடிகர் ராம் சரண் இணையும் புதிய படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

  இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தயாரானார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

  இந்நிலையில் படக்குழுவினரை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்துள்ளனர். படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் ஒரு புகைப்படத்தில் தோன்றும்படி வித்தியாசமான படத்தை அறிமுகம் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Shankar - Ram Charan movie crew introduction poster goes viral, shankar, shankar ram charan, kiara advani, telugu actor chiranjeevi, director shankar, shankar movies, kiara advani in shankar movie, ஷங்கர், இயக்குனர் ஷங்கர், ஷங்கர் திரைப்படங்கள், ஷங்கர் படத்தில் சிரஞ்சீவி, ஷங்கர் ராம் சரண், கியாரா அத்வானி, ஷங்கர் படத்தில் கியாரா அத்வானி, ஷங்கர் கியாரா அத்வானி, ஷங்கர் ராம் சரண் பட போஸ்டர்
  ஷங்கர் - ராம் சரண் படம்


  அதோடு இன்று ராம் சரண் - ஷங்கர் படத்தின் பூஜையும் நடந்தது. பூஜை முடிந்ததும், ராம் சரண் நடிக்க, சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ஷங்கர் ஆக்ஷன் சொல்ல முதல் காட்சி படமாக்கப்பட்டது. அதோடு ரன்வீர் சிங், சிரஞ்சீவி, ராஜமௌலி ஆகியோர் ஷங்கர் - ராம் சரண் படத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: