முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷங்கர் - கமல் ஹாசனின் இந்தியன் 2' இண்ட்ரெஸ்டிங் அப்டேட்!

ஷங்கர் - கமல் ஹாசனின் இந்தியன் 2' இண்ட்ரெஸ்டிங் அப்டேட்!

கமல் ஹாசன் - ஷங்கர்

கமல் ஹாசன் - ஷங்கர்

இந்த ஷெட்யூலில் தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். ஷங்கர் இயக்கும் இப்படம் ஊழலுக்கு எதிரான தமிழ் கிளாசிக் படமான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாகும். ‘இந்தியன் 2’ படத்தின் 10-வது ஷெட்யூலுக்குப் பிறகு ஷங்கர் தற்போது, மீண்டும் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் ‘ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

தகவல்களின்படி, ‘இந்தியன் 2’ படத்தின் 11வது ஷெட்யூல் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தொடங்கும் என்றும், இந்த ஷெட்யூல் ஒரு நீண்ட படப்பிடிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஷெட்யூலில் தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், நீண்ட தாமதத்திற்கு பிறகு  2022-ல்  படப்பிடிப்பு துவங்கியது. இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan