Home /News /entertainment /

ஷாங் - சி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியானது..

ஷாங் - சி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியானது..

ஷாங் - சி

ஷாங் - சி

Shang Chi Part 2 : முதல் பாகத்தைப் போல இரண்டாவதிலும் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம்.

மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸை அடிப்படையாக வைத்து தயாரான மார்வெலின் 25 வது திரைப்படம் ஷாங் - சி. இதன் சீக்வெல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களே சூப்பர் ஹீரோக்களாக நடிப்பார்கள். பிறகு கறுப்பு சூப்பர் ஹீரோக்களும் வந்தார்கள். ஆனால், ஆசியா சார்ந்த எந்த சூப்பர் ஹீரோவும் இல்லை. அந்தக் குறையை போக்கிய படம் ஷாங் - சி. இதில் சூப்பர் ஹீரோவாக நடித்த Simu Liu இன் பூர்வீகம் சீனா.

also read : புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம்..

இந்த வருடம் வெளியான படம் உலக அளவில் வெற்றி பெற்றது. யுஎஸ்ஸில் இதுவரை 224 மில்லியன் டாலர்களும், பிற நாடுகளில் 207 மில்லியன் டாலர்களுமாக இதுவரை சுமார் 431 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. மற்ற சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இல்லாத மார்ஷியல் ஆர்ட் சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தின் சிறப்பம்சமாக அமைந்தன. படத்தைப் பார்த்தவர்களின் அடுத்தக் கேள்வியாக இருந்தது, இதன் சீக்வெல் வருமா?

ஆம், என்று அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. ஷாங் - சி யை இயக்கிய டெஸ்டின் டேனியல் கிரீட்டனே இதன் சீக்வெலையும் இயக்குகிறார். முதல் பாகத்தைப் போல இரண்டாவதிலும் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த ஏஷியன் சூப்பர் ஹீரோவை மற்ற சூப்பர் ஹீரோ திரைப்படங்களிலும் பயன்படுத்த மார்வெல் திட்டமிட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Hollywood

அடுத்த செய்தி