ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தில் நடிகர் ஷாமுக்கு என்ன ரோல்? -வெளியான முக்கிய அப்டேட்

வாரிசு படத்தில் நடிகர் ஷாமுக்கு என்ன ரோல்? -வெளியான முக்கிய அப்டேட்

விஜய் - ஷாம்

விஜய் - ஷாம்

Vijay Varisu தளபதி திரையில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல. நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டார் தான். நான் தெலுங்கில் 120 படங்கள் நடித்துவிட்டேன். இருப்பினும் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு படத்தில் விஜய்யின் தம்பியாக தான் நடித்திருப்பதாக இசை வெளியீட்டு விழா நடிகர் ஷாம் தெரிவித்தார்.

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ட்விட்டரில் டிரெண்டிங்

இதற்கிடையே வாரிசு இசை வெளியீட்டு விழா ட்விட்டரில் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு சென்ற ரசிகர்கள் விஜய் குறித்து பிரபலங்கள் பேசுவதை பகிர்ந்து வருவதால் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஷாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நான் இந்தப் படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்திருக்கிறேன். ஆனால் அவர் பார்ப்பதற்கு என்னை விட இளமையாக இருக்கிறார். தில் ராஜுவிற்கு உண்மையாகவே தில் அதிகம் என்றார்.

ரஞ்சிதமே பாடலுக்கு ஒரே ஷாட்டில் தொடர்ந்து 1 நிமிடம் 20 நொடி நடனமாடிய விஜய்..! - ஜானி சொன்ன செம அப்டேட்

அவரைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது, தளபதி திரையில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல. நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டார் தான். நான் தெலுங்கில் 120 படங்கள் நடித்துவிட்டேன். இருப்பினும் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu