Home /News /entertainment /

ஆசிட் அடித்து கொலை செய்வேன் என மிரட்டுகிறார் - மீராமிதுன் மீது ஷாலு ஷம்மு போலீசில் புகார்

ஆசிட் அடித்து கொலை செய்வேன் என மிரட்டுகிறார் - மீராமிதுன் மீது ஷாலு ஷம்மு போலீசில் புகார்

மீராமிதுன் | ஷாலு ஷம்மு

மீராமிதுன் | ஷாலு ஷம்மு

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மீராமிதுன் மீது நடிகை ஷாலு ஷம்மு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீப காலமாக தமிழ்த் திரை உலகைப் பற்றி பற்றியும், தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் விஜய் அவரின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா ஆகியோரைப் பற்றி அவதூறாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் மீராமிதுனின் இந்த செயலுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு நடிகர்கள் குறித்து கருத்து கூறி வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி நடிகை மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறு கூறி வருவதாக நடிகை சனம் ஷெட்டி லீகல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் அவதூறு வழக்கு போடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போன்ற திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சர்மி (எ) ஷாலு ஷம்மு என்பவர் நடிகை மீரா மிதுன் தன்மீது அவதூறு பரப்பி வருவதாகவும், அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த சர்மி(எ) ஷாலு ஷம்மு, வெட்டி விளம்பரத்திற்காக மட்டுமே மீரா மிதுன் தமிழ்த் திரையுலகை பற்றியும் நடிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைப் பற்றியும் கீழ்தரமாக பேசி வருகிறார் எனவும், அதனால் நடிகர் விஜய் மற்றும் சூர்யா அவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக தான் கருத்து பதிவிட்டதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு ஆதரவாக தான் செயல்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத மீராமிதுன் தன்னைப்பற்றி கீழ்த்தரமாக சமூகவலைதளங்களில் கருத்து கூறியும் அவரது ஆதரவாளர்களிடம் தனது மொபைல் நம்பரை கொடுத்து கால் செய்து மிரட்டுமாறும் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாக மீரா மிதுன் ஆதரவாளர்கள் எனக்கு போன் செய்து முகத்தில் ஆசிட் அடித்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனது புகைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பான சில இணையதளங்கள் மற்றும் செயலிகளில் பதிவேற்றம் செய்து ஆபாசமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.





சினிமா துறையில் இருந்து என்னை காலி செய்து விடுவதாக மீராமிதுன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் என்னைப்பற்றி கீழ்த்தரமாக பதிவிட்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

மீரா மிதுன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். மீரா மிதுன் மீது நடிகர் சங்கத்திலும் புகார் தெரிவித்திருக்கிறேன் இவ்வாறு ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress Meera Mithun

அடுத்த செய்தி