• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகனுடன் ருத்ர தாண்டவம் படத்தை பார்த்த ஷாலினி அஜித் - இயக்குநர் வெளியிட்ட போட்டோ!

மகனுடன் ருத்ர தாண்டவம் படத்தை பார்த்த ஷாலினி அஜித் - இயக்குநர் வெளியிட்ட போட்டோ!

மகனுடன் ஷாலினி அஜித்

மகனுடன் ஷாலினி அஜித்

இப்படத்திற்கு இயக்குநர் தங்கர்பச்சன் உள்ளிட்ட சில தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனது சகோதரர் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தை நடிகை ஷாலினி அஜித் திரையரங்கில் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    பழைய வண்ணாரபேட்டை, திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தை தனது ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மோகன் ஜி தயாரித்தும் உள்ளார். நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    இப்படத்திற்கு இயக்குநர் தங்கர்பச்சன் உள்ளிட்ட சில தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    Also read... விவாதத்தை கிளப்பிய ஆன்ட்ரியாவின் டாட்டூ - புகைப்படங்கள்!

    இந்நிலையில் ஷாலினி அஜித் ருத்ரதாண்டவம் படத்தை பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தின் ஹீரோ ரிச்சர்ட், ஷாலினி அஜீத்தின் சகோதரர் என்பது தெரிந்ததே.



    இதனை தொடர்ந்து ஷாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் மோகன் ஜி தனது முகநூலில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: