Mukesh Kanna: ’நான் உயிரோடு இருக்கிறேன்’ சக்திமான் முகேஷ் கண்ணா விளக்கம்!

முகேஷ் கண்ணா

முகேஷ் கண்ணா ஆளாகி, இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் யாரோ பதிவிட, இந்த விஷயம் பாலிவுட், திரையுலகினர் மத்தியில் பரபரப்பானது.

  • Share this:
    தான் கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை எனவும் அப்படியான செய்தி வெறும் வதந்தி தான் எனவும் சக்திமான் நாடகத்தில் நடித்த முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.

    90’ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத நினைவுகளுள் ஒன்று சக்திமான் நாடகம். அந்த சீரியலில் சூப்பர் ஹீரோ போல குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தார் முகேஷ். இதில் நடித்தது மட்டுமல்ல, அவர் தான் தயாரிக்கவும் செய்தார். 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பானது.

    இந்நிலையில் சமீபமாக இந்தியாவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகின்றனர். குறிப்பாக முதல் அலையை விட, இந்த இரண்டாம் அலை அதிக நபர்களின் உயிரை பலி வாங்கியிருக்கிறது. இதையடுத்து நடிகர் முகேஷ் கண்ணா ஆளாகி, இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் யாரோ பதிவிட, இந்த விஷயம் பாலிவுட், திரையுலகினர் மத்தியில் பரபரப்பானது.

    இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட முகேஷ் கண்ணா, 'தான் நல்ல உடல்நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதாகவும், தான் இறந்து விட்டதாக வந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களை கேட்டு கொண்டார். மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: