முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''சிவனின் திட்டம்.. அப்போ என்ன உள்ளேயே விடல, ஆனா இப்போ....'' - கோவில் விழாவில் உருக்கமாக பேசிய ஷகிலா!

''சிவனின் திட்டம்.. அப்போ என்ன உள்ளேயே விடல, ஆனா இப்போ....'' - கோவில் விழாவில் உருக்கமாக பேசிய ஷகிலா!

ஷகிலா

ஷகிலா

நான் கடந்த முறை கேரளா வந்தபோது பிரச்னைகளை சந்தித்தேன். வணிக வளாகம் ஒன்றில் நுழைய தடைவிதிக்கப்பட்டேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாள ஆபாச படங்களில் நடித்துவந்த ஷகிலாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ், தெலுங்கு படங்களில் காமெடி வேடம் கிடைத்தது. ஆனால் அந்தப் படங்களில் அவர் கவர்ச்சிகரமாகவே சித்தரிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சி அவர் மீதான பிம்பத்தை முழுவதுமாக மாற்றியது. குக் வித் கோமாளியில் ஷகிலாவை சக போட்டியாளர்களும் , கோமாளிகளும் அம்மா என்றே அழைக்க, ரசிகர்களும் அவரை ஷிகிலாம்மா என்றே குறிப்பிடத் துவங்கினர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் கோழிக்கோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஷகிலா கலந்துகொள்ள சென்றார். ஷகிலா சிறப்பு விருந்தினர் என்றதும் அவரை வணிக வளாக நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்ததோடு அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்பு காரணம் கருதியே நிகழ்ச்சியை ரத்து செய்ததாக வணிக வளாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோவில் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஷகிலா கலந்துகொண்டார். விழாவில் பேசிய ஷகிலா தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளால் திட்டமிடப்பட்டதும் குறிப்பிட்டார்.

மேலும் நான் கடந்த முறை கேரளா வந்தபோது பிரச்னைகளை சந்தித்தேன். வணிக வளாகம் ஒன்றில் நுழைய தடைவிதிக்கப்பட்டேன். கடவுள் எனக்காக வேறு திட்டங்களை வைத்திருப்பதை நான் இப்பொழுது உணர்ந்துகொண்டேன். வணிக வளாகத்தில் என்னைப் பார்க்க 200, 300 பேர் வந்திருந்தனர். ஆனால் இப்பொழுதோ என்னை 1000 கண்கள் பார்க்கிறேன். எனக்காக சிவனின் திட்டம் என்று பேசினார்.

First published:

Tags: Shakeela