ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம்?

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம்?
நடிகை ஷகிலா
  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் படங்களை சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்திலும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக நடிகை வரலட்சுமியின் டேனி, யோகி பாபு நடித்த காக்டெய்ல் உள்ளிட்ட படங்களும் விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ‘ஷகீலா நாட் பார்ன் ஸ்டார்’ என்ற டைட்டில் உடன் உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். அவருடன் தேசியவிருது பெற்ற பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியும் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


Shakkeela Movie Postar
ஷக்கீலா பட போஸ்டர்


மேலும் படிக்க: பாகுபலிக்கு குறைந்ததல்ல சத்யராஜின் ‘கட்டப்பா’ கேரக்டர் - சமாய் தாக்கர்

தனது இளமைக்காலத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை ஷகிலா தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோரின் படங்கள் செய்த வசூலை ஷகிலாவின் படங்கள் முறியடித்த வரலாறும் உண்டு. ஷகிலாவின் திரைவாழ்க்கையில் மிக முக்கியப் படமான கின்னருத்தும்பிக்கள் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு கோடிகளில் வசூலைக்குவித்தது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading