Home /News /entertainment /

ஷாரூக்கான் பட ஷூட்டிங்கிலிருந்து லீக்கான ஃபோட்டோ… அதிர்ச்சியில் படக்குழு

ஷாரூக்கான் பட ஷூட்டிங்கிலிருந்து லீக்கான ஃபோட்டோ… அதிர்ச்சியில் படக்குழு

நடிகர் ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கான்

Dunki Movie : டுங்கி படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக டாப்சி பன்னு நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டுங்கி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக பஞ்சாபில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.

    ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் டுங்கி படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து, புகைப்படங்கள் லீக்காகியுள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    டுங்கி படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி இயக்கி வருகிறார்.

    ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

    தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம் 

    முன்னாபாய் எம்.பி.பி.எஸ். (தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.), ஆமிர் கான் நடித்த பி.கே., 3 இடியட்ஸ் உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை ராஜ் குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இதனால் டுங்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    ஏற்கனவே டுங்கி படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியிருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்னும் வெளியாகாத நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

    லீக்கான டுங்கி ஷூட்டிங் ஸ்பாட் படம்


    எளிமையாள செக்கட் சட்டை மற்றும் கருப்பு பேன்ட்டுடன் கையில் சீக்கியர்கள் அணியும் ‘கடா’வை ஷாரூக்கான் அணிந்திருக்கிறார். வழக்கமான ஹேர்ஸ்டைலுக்கு பதிலாக இந்த ஹேர்ஸ்டைல் காணப்படுகிறது.

    டுங்கி படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக டாப்சி பன்னு நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டுங்கி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக பஞ்சாபில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.

    பிரியங்கா சோப்ராவின் 40-வது பிறந்தநாள்... அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்! 

    அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்திலும் ஷாரூக்கான் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Shah rukh khan

    அடுத்த செய்தி