ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Jawan Shah rukh khan Atlee : ஜவான் படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து, அட்லீ ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இடையே கொரோனா பாதிப்பு ஓராண்டுக்கும் மேலாக நிலவியபோது இந்தப் படம் கைவிடப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அட்லீ – ஷாருக்கான் இணைந்து படம் பண்ணுவது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டு, படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு ஷாரூக்கான் படத்தின் டைட்டில் டீசர் குறித்த தகவல் வெளி வந்தது.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?

இதில் படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிரடி அறிவிப்பாக நேற்று அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபுவும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முதன் முறையாக இந்த படத்தில் அனிருத்துடன் அட்லீ இணைகிறார்.

ஜவான் டைட்டில் அறிவிப்பு வீடியோவை பார்க்க... 

' isDesktop="true" id="754803" youtubeid="fPX0C-g5xpU" category="cinema">

ஜவான் படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க     விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…

இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பாக ஷாரூக்கானின் மனைவி கவுரிகான் தயாரிக்கிறார்.

First published:

Tags: Atlee, Shah rukh khan