முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வசூலில் பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளிய பதான்- கலெக்சனில் புதிய உச்சம்

வசூலில் பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளிய பதான்- கலெக்சனில் புதிய உச்சம்

பதான்

பதான்

ஷாரூக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பதான் திரைப்படம் வசூலில் பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்திய படங்களில் பதான் திரைப்படம் வசூலில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்தி திரையுலகில் உருவான பெரும்பான்மையான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்தி வட்டாரத்தில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது.

இதற்கு முன்னதாக பாகுபலி 2 திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.510 கோடியை வசூலித்தது. தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு இந்தியில் டப் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் வசூல், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பாகுபலி 2 வெளியான அன்றைய தேதியில், அந்த படம்தான் இந்தி வட்டாரத்தில் வசூலில் நம்பர் ஒன்னாக இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு வரையில் அந்த சாதனை முறியடிக்கப்படாத நிலையில், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியான ஷாரூக்கானின் பதான் திரைப்படம் முறியடித்துள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் உள்ளிட்டோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட்டது. ஏற்கனவே இந்த திரைப்படம் ரூ. 1000 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தி மொழியில் மட்டும் பதான் திரைப்படம் ரூ. 526 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை பதான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஷாரூக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Shah rukh khan