Home /News /entertainment /

ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நாளை தொடக்கம்…

ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நாளை தொடக்கம்…

ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ ஒன்று கடந்த ஜூன் 2ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இயக்குனர் அட்லி இயக்கத்தில்  ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்கவுள்ளது.

இயக்குனர் அட்லி, பிகில்  திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட் நடிகர்  ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தப் படத்திற்கு ஜவான் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதியாக மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில், நாயகி கதாபாத்திரம் ஏற்றுள்ள நயன்தாரா கலந்துகொண்டார்.

ஆதரவற்றோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பூமிகா – பிரபலங்கள் வாழ்த்து

இந்த நிலையில் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது. இதற்காக ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.



அதற்காக நடிகர் ஷாருக்கான் சென்னை வந்துள்ளார். ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித் படங்களின் குழந்தை நட்சத்திரம்…

படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ ஒன்று கடந்த ஜூன் 2ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Atlee, Shah rukh khan

அடுத்த செய்தி