ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜவான் படத்துக்கு 20 நாட்கள் ஷூட்டிங் பேலன்ஸ்.. ராஜஸ்தான் செல்லும் நயன்தாரா!?

ஜவான் படத்துக்கு 20 நாட்கள் ஷூட்டிங் பேலன்ஸ்.. ராஜஸ்தான் செல்லும் நயன்தாரா!?

ஷாரூக்கான் - நயன்தாரா

ஷாரூக்கான் - நயன்தாரா

ஜவான் படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

  அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துவரும் ஜவான் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

  ஜவான் படத்தின் ஷூட்டிங் 30 நாட்களாக சென்னையில் நடைபெற்று முடிந்தது. முன்னதாக புனே, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஷாருக்கான் - நயன்தாரா இடம்பெறும் காட்சிகளின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

  20 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இத்துடன் நயன்தாரா - ஷாருக்கான் பங்கேற்கும் காட்சிகள் நிறைவுபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையொட்டி படப்பிடிப்பு நடைபெறும் ராஜஸ்தான் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  தாய்லாந்தில் சீறும் அஜித்தின் பைக்.. மீண்டும் ட்ரிப்பை தொடங்கிய துணிவு ஹீரோ!

  நயன்தாரா - ஷாருக்கான் பங்கேற்கும் காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டு இருக்கலாம் என்றும், பர்சனல் வேலை காரணமாக நயன்தாரா ஷூட்டிங்கில் பங்கேற்காததால் ராஜஸ்தானில் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  ‘ஜவான்’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். முன்பு சென்னையில் நடைபெற்ற 30 நாள் ஷூட்டிங்கை மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்தி, ஷாருக்கான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லி, 30 நாட்கள் படப்பிடிப்பை சென்னையில் நடத்தியதால் இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தினர் பலன் பெற்றதாக கூறியிருந்தார்.

  சூப்பர் சிங்கர் ஜோடி அஜய் கிருஷ்ணா - ஜெஸி வீட்டில் விசேஷம்! குவியும் வாழ்த்துக்கள்

  அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தைத் தவிர்த்து ஷாருக்கான் தற்போது பதான் மற்றும் டுங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இந்த 3 படங்கள் வெளியாக உள்ளதால் ஷாருக்கானின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  இதற்கிடையே ஜவான் படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


  Published by:Musthak
  First published:

  Tags: Nayanthara, Shah rukh khan