ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான் திரைப்படம்… ஷாரூக் – சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான் திரைப்படம்… ஷாரூக் – சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாட்டம்

பதான் படத்தில் ஷாரூக் கான், ஜான் ஆப்ரஹாம், தீபிகா படுகோனே

பதான் படத்தில் ஷாரூக் கான், ஜான் ஆப்ரஹாம், தீபிகா படுகோனே

இந்தி திரையுலகில் பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கான். தீபிகா படுகோனே. ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். பதான் திரைப்படத்திற்கு என்ன மாதிரியான விமர்சனம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளனர். இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் பதான் படத்தின் விமர்சனங்கள் ட்ரெண்டிங்கிற்கு வந்தன. இந்த திரைப்படம் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் 5000- க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கானுடன் இணைந்து சல்மான்கான் நடித்துள்ளார். படத்தில் சண்டைக் காட்சிகளை வைக்கலாம் ஆனால் சண்டைக்காட்சிகளில் படம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறும் அளவுக்கு, இதில் ஆக்ஷன் நிறைந்த இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் படக்குழுவினர் அதிக சிரமப்பட்டு எடுத்த ஆக்சன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தி திரையுலகில் பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆமிர் கான் நடித்த லால் சிங் சத்தா, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக், அக்சய் குமார் படங்கள் உள்ளிட்டவை சுமாரான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அதே நேரம் சமீபத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்துடைய ஹிந்தி ரீமேக் நல்ல வசூலை குவித்தது. இடையே கேஜிஎப் 2 திரைப்படம் வசூலை அள்ளியது.

இந்நிலையில் பாலிவுட்டை தூக்கி நிறுத்தும் வகையில் பதான் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரும் வசூலை குவித்து வருகிறது. முன் பதிவில் மட்டும் 69 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டில் முந்தைய படங்கள் செய்த சாதனைகள் சிலவற்றை ஷாருக்கானின் பதான் திரைப்படம் முறியடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை குடியரசு தின விடுமுறை, அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதிநாட்கள் ஆகியவற்றின் காரணமாக பதான் திரைப்படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என்று பாலிவுட் திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

First published:

Tags: Deepika Padukone, Shah rukh khan