Home /News /entertainment /

ஷாரூக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

ஷாரூக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

பதான் படத்தின் ஷாரூக்கான்

பதான் படத்தின் ஷாரூக்கான்

Pathaan First Look : அடுத்தாண்டு சீரான இடைவெளியில் 3 படங்கள் ஷாருக்கானுக்கு வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

    இந்தப் படத்தை சமீபத்தில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க - ‘இந்தி பட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ – அருண் விஜய் பேட்டி

    மேலும் படத்தில் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில், பதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதான் திரைப்படம் திரைக்கு வரும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.



    முன்னதாக ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கும் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - ரூ. 5 கோடி காருடன் அஜித்… வைரலாகும் லண்டன் புகைப்படங்கள்

    இதேபோன்று பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டுங்கி என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சீரான இடைவெளியில் 3 படங்கள் ஷாருக்கானுக்கு வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Shah rukh khan

    அடுத்த செய்தி