Home /News /entertainment /

ஷாரூக்கான்- அட்லீ பட ஷூட்டிங் சென்னையில் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்…

ஷாரூக்கான்- அட்லீ பட ஷூட்டிங் சென்னையில் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்…

அட்லி - ஷாருக்கான்

அட்லி - ஷாருக்கான்

ShahRukh khan Movies : முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் ஜவான் படமும், டிசம்பரில் டுங்கியும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஒரு மாதத்திற்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜவான் படத்திற்காக அதில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் குறித்த தகவலும் வெளிவந்திருக்கிறது.

    ஜவான் படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில்அவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அட்லீ இந்த படத்தை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார் ரகுல் ப்ரீத்…

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 2 மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி, சென்னையில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட செட்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னையில்  மட்டும் ஒரு மாதத்திற்கு ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், தற்போது ஒரு மாதம் வரை சென்னையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஜூன் மாதம் வெளியான படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கவனத்தை ஈர்த்தது. ஷாரூக்கான் தற்போது டுங்கி, பதான் மற்றும் ஜவான் ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார்.

    17 ஆண்டுகளில் முதன் முறையாக மலையாள சினிமாவில் நடிக்கப் போகும் தமன்னா

    முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் ஜவான் படமும், டிசம்பரில் டுங்கியும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன.

    சென்னையில் ஜவான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஷாரூக்கான் ராஜ் குமார் ஹிரானி இயக்கும் டுங்கி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். இந்த படத்தில் ஷாரூக்கானுன் டாப்சி நடிக்கிறார். ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் இடம்பெறுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Atlee, Shah rukh khan

    அடுத்த செய்தி