ஷாருக்கான் நடிப்பில் தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி வரும் பதான் படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஆக்சன் நாயகியாக நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோன், மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோரது நடிப்பில், பிரம்மாண்ட படைப்பாக பதான் திரைப்படம் உருவாகி வருகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படம் பெரியளவில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பதானாக நடிக்கும் ஷாருக்கின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை ஷாருக்கான் திரையுலகத்திற்கு வந்து வெற்றிகரமான 30 ஆண்டுகளை நிறைவு செய்த நாளான ஜூன் 25 அன்று அதனை வெளியிட்டனர்.
இன்று, ஜூலை 25-ஆம் தேதி, பதான் படம் வெளிவர, இன்றிலிருந்து ஆறு மாத காலம் இருப்பதால், பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் பதான் திரைப்படத்தின் நாயகியான தீபிகா படுகோனின் மிரட்டலான தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இது குறித்து பேசுகையில், “தீபிகா படுகோன் ஒரு மிகப்பெரிய... மிகப்பெரிய நட்சத்திரமாவார் (நான் நிச்சயம் அதனை இரண்டு முறை சொல்லித்தான் ஆகவேண்டும்). எங்கள் பதான் படத்தில் அவர் இருப்பதால், படம் மேலும் சுவாரஸ்யமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் ஆகியுள்ளது.
இதுவரை பதான் படத்தில் அவரது தோற்றத்தை யாரும் பார்த்ததில்லை. எங்களது இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை அனைவரிடமும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அனைவர் மனதையும் ஆச்சிரியத்தில் மூழ்கடிக்கும் ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கிறார்.
வேறு யாரிடமும் இல்லாத வகையில், தீபிகா இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளபடும் ஒரு அரிதான நடிகையாக உள்ளார். அவர் ஒரு திரைப்படத்தில் இருப்பதே, அப்படத்திற்கு ரசிகர்களை ஈர்க்கும் ஒரு தனித்துவமான யுக்தியாக இருக்கும்.
அனைத்து பாலினத்தவரும், வயது வேறுபாடின்றி ரசிக்கும் ஒரு நடிகை தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்; இந்தியாவில் இன்று தீபிகா படுகோனை தவிர அப்படிப்பட்ட ஒரு பெரிய நடிகை யாருமில்லை.
ஜனவரி 25, 2023, அன்று திரைக்கு வரவிருக்கும் பதானில் அவரது கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடுவதை நாங்கள் மேலும் தாமதிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.
திரையுலகின் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றான ஷாருக் மற்றும் தீபிகா - ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்ற பல வெற்றி திரைப்படங்களை வழங்கியுள்ளனர்.
பதான் திரைப்படத்திற்காக இருவரும் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனவரி 25, 2023, அன்று பதான் திரைப்படம் இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது!
Published by:Musthak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.