Home /News /entertainment /

ஷாஹித் கபூரின் ஜெர்சி படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் மீண்டும் தொடக்கம்

ஷாஹித் கபூரின் ஜெர்சி படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் மீண்டும் தொடக்கம்

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

ஜெர்சி என்ற விளையாட்டு சம்மந்தமான படத்தில் ஷாஹித் கபூர் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதி முதல் சண்டிகரில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அங்கு படத்தின் பெரிய பகுதியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ஜெர்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. தற்போது லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து படக்குழுவினர் நடிகர் ஷாஹித் கபூரிடம் கேட்டனர். அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டதால் விரைவில் தனது ஜெர்சி படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளனர்.

    இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஷாஹித் கபூர் மற்ற அணியுடன் சேர்ந்து சண்டிகருக்குச் செல்வார்கள். அங்கு படத்தின் முக்கிய பகுதிகள் படமாக்கப்படும். கௌதம் தின்னனூரி தலைமையில் உருவாகி வரும் ஜெர்சி, ஒரு விளையாட்டு படம் ஆகும்.

    தெலுங்கு விளையாட்டு நாடகத்தின் தழுவலான இந்த படத்தில் தனது வாழ்க்கையில் பல விபத்துக்களைச் சந்தித்த பிறகு ஒரு உணர்ச்சிவசப்பட்ட கிரிக்கெட் வீரரின் கதாப்பாத்திரத்தில் ஷாஹித் நடிக்கிறார். இனி வரும் காட்சிகளில் முக்கியமான விளையாட்டு காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் ஷாஹித் தனது கிரிக்கெட் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திரைப்படம் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் விளையாட்டுக்கு மீண்டும் வருவதற்கான முயற்சிகளைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பின் போது ஷாஹித் கபூர் காயமடைந்ததாக செய்திகள் வந்தன. ஒரு காட்சிக்கு முன், நடிகர் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பந்து அவரின் கீழ் உதட்டில் பட்டு அவரை  காயப்படுத்தியது.

    இதையடுத்து நடிகர் ஷாஹித் கபூரை படக்குழுவினர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் அவருக்கு தையல் போடப்பட்டு ஒய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் பங்கஜ் கபூர் தவிர மிருணால் தாக்கூர் நடிக்கிறார். ஜெர்சி ஆகஸ்ட் 28, 2020ம் ஆண்டு அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்ட தாமதம் காரணமாக திரைப்படம் எப்போது வெளிவரும் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கான கபீர் சிங்கில் ஷாஹித் கடைசியாக நடித்தார். சந்தீப் வாங்கா எழுதி இயக்கிய அந்த படத்தில் ஷாஹித் உடன் கியாரா அத்வானி நடித்தார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து அதே உத்வேகத்துடன் ஜெர்ஸி படத்தில் நடிக்க படக்குழு அனைவரும் ஆவலாக உள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி