ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - பாலிவுட் நடிகர் சாஹித் கபூர்

விஜய் சேதுபதியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - பாலிவுட் நடிகர் சாஹித் கபூர்

விஜய் சேதுபதி - சாஹித் கபூர்

விஜய் சேதுபதி - சாஹித் கபூர்

நான் அவருடன் நிறைய வேலை செய்ய விரும்புகிறேன், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட் நடிகர் சாஹித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபார்ஸி வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ராஜ் மற்றும் டிகேயின் வெப் தொடரான ஃபார்ஸியின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. சாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இதன் மூலம் OTT-யில் அறிமுகமாகிறார்கள். டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், ஷாஹித் கபூர் ஃபார்ஸியில் இடம்பெற்றது குறித்து விரிவாகப் பேசினார். அப்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய சாஹித் கபூர், “விஜய் சாருடன் நான் முதல் முறை இணைந்திருக்கிறேன். டீசரை வெளியிட்டபோது, அவரை மக்கள் செல்வன் என்று அழைத்தேன். நான் இனி அவரை மக்கள் செல்வன் என்று அழைக்கப் போகிறேன், ஏனென்றால் அவர் ஆளுமைக்கு அந்த பெயர் பொருத்தமாக இருக்கிறது. இது ஒரு அழகான சொல்.

' isDesktop="true" id="872443" youtubeid="rcQ_xZdzPBc" category="cinema">

ஜி.வி.பிரகாஷின் கள்வன் டீசரை வெளியிட்ட சூர்யா!

அவருடன் பணியாற்றுவது ஒரு பாக்கியம். எங்களுக்கு காம்பினேஷன் காட்சிகள் நிறைய இல்லை, எங்களின் டிராக்குகள் இணையாக இருக்கும். சில சமயங்களில் நாங்கள் சந்திக்கும்படி கதை இருக்கும். அவர் உண்மையிலேயே இதயத்தில் இருந்து நடிகராக இருக்கிறார். நான் அவருடன் நிறைய வேலை செய்ய விரும்புகிறேன், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன். அவர் ஒரு தனித்துவமான கலைஞர், அவர் இந்த நிகழ்ச்சியில் இருப்பது பாக்கியம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Bollywood