ஷாஹித் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறதா சூர்யாவின் சூரரைப்போற்று?

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாஹித் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறதா சூர்யாவின் சூரரைப்போற்று?
சூரரைப் போற்று
  • Share this:
இறுதிச்சுற்று படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன்பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இதனிடையே தணிக்கையில் சூரரைப்போற்று திரைப்படத்துக்கு ‘யு’சான்றிதழ் கிடைத்திருக்கும் தகவலையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

தமிழில் இன்னும் திரைக்கு வராத இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், அதற்காக நடிகர் ஷாஹித் கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த ஷாஹித் கபூர் அதற்கு கிடைத்த வரவேற்பை மனதில் வைத்தும், சூரரைப்போற்று திரைப்படத்தின் டீசர் காட்சியைப்பார்த்தும் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம்காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எனக்கு கொரோனா பாதிப்பா? - நயன்தாரா விளக்கம்

”ஆகாசம் நீ ஹத்துரா” என்ற டைட்டிலில் சூரரைப்போற்று திரைப்படம் தெலுங்கில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading