உயிரிழந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை - தத்தெடுத்த பிரபல நடிகர்

ரயில் நிலையத்தில் தாய் உயிரிழந்தது தெரியாமல் அவரது போர்வையை இழுத்து விளையாடிய குழந்தையை பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளை தத்தெடுத்துள்ளது.

உயிரிழந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை - தத்தெடுத்த பிரபல நடிகர்
கோப்பு படம்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தண்ணீர், உணவு, இருப்பிடமின்றி சாலைகள், ரயில் நிலையங்கள், மாநில எல்லைகளில் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் மூலம் பீகார் மாநிலம் முஷாஃபர்பூருக்கு திரும்பினார்.

முஷாஃபூர் ரயில் நிலையத்தை சென்றடைந்த போது அந்தப் பெண் நிலை குலைந்து உயிரிழந்தார். அவர் ஏற்கெனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் தனது தாயின் உடல் அருகே நின்று அவர் இறந்தது கூட தெரியாமல் போர்வையை இழுத்து விளையாடியது குழந்தை. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் குழந்தையின் நிலை என்னவாகப்போகிறதோ என்று பலரும் கவலை தெரிவித்தனர்.

நேற்று அக்குழந்தையை நடிகர் ஷாரூக்கானின் மீர் ஃபவுண்டேஷன் தத்தெடுத்திருப்பதாக ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், “பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என்று வேண்டுவதாகவும், அந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்றும் குறிப்பிட்ட ஷாருக்கான், நமது அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்றும் ஷாரூக்கான் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: வீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading