பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட ஷாரூக்கானின் சொகுசு பங்களா- காரணம் என்ன தெரியுமா?

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது பிரம்மாண்டமான சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவரால் மூடியிருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட ஷாரூக்கானின் சொகுசு பங்களா- காரணம் என்ன தெரியுமா?
ஷாரூக்கான்
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது மகாராஷ்டிரா. மும்பையில் பல பாலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பிரம்மாண்ட சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவரால் மூடியிருப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகின.

கொரோனா அச்சத்தின் காரணமாக ஷாரூக்கான் இப்படி செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். ஆனால் மும்பை ஊடகத்தினர் வெளியிட்டிருக்கும் செய்தியில் ஒவ்வொரு வருடம் மும்பையில் பெய்யும் அதிகமான மழையிலிருந்தும், பலத்த காற்றிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவே ஷாரூக்கான் வீட்டின் வெளிப்புறத்தை பிளாஸ்டிக் கவரால் மறைத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் ஷாரூக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து ஷாரூக்கான் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் தரப்படவில்லை.


முன்னதாக ஷாரூக்கான் தனது அலுவலகத்தை கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்த மும்பை மாநகராட்சிக்கு அனுமதி வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading