பிகில் டிரெய்லர் பார்த்த ஷாருக் கானின் ரியாக்ஷன்!

'ஷக் டே இந்தியா' படத்தில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

Vijay R | news18-tamil
Updated: October 12, 2019, 9:50 PM IST
பிகில் டிரெய்லர் பார்த்த ஷாருக் கானின் ரியாக்ஷன்!
விஜய் - ஷாருக் கான்
Vijay R | news18-tamil
Updated: October 12, 2019, 9:50 PM IST
பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


விஜய்


2நிமிடம் 41 விநாடிகள் நீளம் கொண்ட இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், அட்லீயின் கலர்ஃபுல்லான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக நேற்று முதலே இதற்கான ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ட்ரெய்லரைப் பார்த்த ஷாருக் கான், “எனது நண்பர்கள் அட்லி, விஜய், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஷக் தே இந்தியா படம் போல் உத்வேகத்தை அளித்துள்ளது“ என்று பதிவிட்டுள்ளார்.

Loading...




'ஷக் தே இந்தியா' படத்தில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...