இது தான் ஆறுதல் சொல்லும் லட்சணமா? ஷாருக் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நடிகர் ஷாருக் கான்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை காலமானார்.

 • Share this:
  பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார். அவர் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இது இரண்டாவது முறையாகும்.

  திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 94-வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும் கால் வீங்கியதால் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே கொண்டாடினார். டிசம்பரில் 99-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு காலமானார். 50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் வசித்து வந்தார்.

  பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று நடிகர் தீலிப் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் கூறினர்.

  Also Read :  இரண்டு பாகங்களாக வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

  இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் சைரா பானுவுக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாருக் கானை திட்டி தீர்த்துள்ளனர். இதற்கு காரணம் அவர் சன் கிளாஸ் அணிந்து அவருக்கு அவர் அருகில் அமர்ந்துள்ளார். மேலும் முகக்கவசம் அணியவில்லை, அவரது இருக்கமான ஆடைகளால் அவரால் தரையில் உட்காரவே முடியவில்லை.  இந்த காரணங்களால் ஷாருக் கானை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். சன் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக தான் ஆறுதல் சொல்வீர்களா? இது எல்லாம் போலி விளம்பரம் ஒருவர் திட்டி தீர்த்துள்ளார். மற்றொருவர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரியாதா என்றும் கருத்து தெரிவித்தள்ளனர்.

  திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: