தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வெப் சீரிஸ் வேலைகளில் ஷாருக்கான்?

ஷாருக்கான் - பிரசாந்த் கிஷோர்

ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலைத் தொடரை உருவாக்கக்கூடும்

 • Share this:
  அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை வெப் சீரிஸாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் எடுப்பதாக தெரிகிறது.

  கடந்த மாதம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்ற சில நாட்களுக்கு பின்னர், அந்தக் கட்சிகளின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக ஐ-பேக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை மும்பையில் உள்ள அவரது வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலைத் தொடரை உருவாக்கக்கூடும் என்றும், அதற்காக இந்த சந்திப்பு நடைப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளைப் பற்றி பேசிய பிரசாந்த் கிஷோர், "தேர்தலில் வெற்றி பெற டி.எம்.சி மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு ஐ-பேக் உதவியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதோடு "நான் ஒரு இடைவெளி எடுத்து ஐ-பேக் டீமை இளம் கைகளிடம் ஒப்படைக்க விரும்புகிறேன், எனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட வேண்டும். நான் தீவிரமாக இருக்கிறேன், இதை இனி செய்ய விரும்பவில்லை. போதுமான அளவு செய்து விட்டேன். இப்போது ஓய்வு எடுத்து வாழ்க்கையில் வேறு ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. நான் இதை விட்டு வெளியேற விரும்புகிறேன்" என்று ஐ-பேக்கை விட்டு விலகுவதற்காக காரணங்களை பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: