ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy 67: தளபதி 67 படத்தில் முக்கிய பாலிவுட் பிரபலம்?

Thalapathy 67: தளபதி 67 படத்தில் முக்கிய பாலிவுட் பிரபலம்?

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

த்ரிஷா, விஷால், நிவின் பாலி, கவுதம் மேனன், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் 'தளபதி 67' படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தளபதி விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்க உள்ளார். 'மாஸ்டர்' ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்துக்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்காக இதுவரை இல்லாத அளவு, நடிகர்களை டிக் செய்து வருகிறாராம். இதற்காக திரைத்துறையின் முக்கிய நட்சத்திரங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள். இதற்கிடையே 'தளபதி 67' படத்தில் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் சென்னையில் 'ஜவான்' படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கானுடன் அதைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 'தளபதி 67' படத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கும், படத்தின் நடிகர்களின் அறிவிப்புக்காகவும் நாம் காத்திருக்க வேண்டும். த்ரிஷா, விஷால், நிவின் பாலி, கவுதம் மேனன், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் 'தளபதி 67' படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

  சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Shah rukh khan, Thalapathy vijay