அஜித், விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் ஷாரூக் கான் சொன்ன பதில்!

அஜித், விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் ஷாரூக் கான் சொன்ன பதில்!
நடிகர் ஷாரூக் கான்
  • News18
  • Last Updated: October 8, 2019, 3:23 PM IST
  • Share this:
ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஷாரூக் கான் பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக் கான், சமூகவலைதளமான ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்த உரையாடல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஷாரூக்கானை விஜய், அஜித் ரசிகர்களும் விட்டு வைக்கவில்லை.


அஜித் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்க என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, என்னுடைய நண்பர் என்று பதிலளித்துள்ளார் ஷாரூக்கான்.அதேபோல் விஜய் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அற்புதம் (Awesome) என்று கூறியுள்ளார். ஷாரூக்கானின் இந்த பதிலை பகிர்ந்து அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் ஒரு ரசிகர் நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், “நிச்சயமாக, தமிழ் குறித்த எனது புரிதல் நன்றாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷாரூக்கான், நான் நேசிக்கும் நபர் என்றும் கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading