ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆடம்பர கடிகாரங்கள்.. வரி கட்டல.. ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட ஷாருக்கான்!

ஆடம்பர கடிகாரங்கள்.. வரி கட்டல.. ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

கான் நவம்பர் 11 அன்று  ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி 2022 இல் கலந்து கொண்டார். அங்கு சர்வதேச சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக அவருக்கு குளோபல் ஐகான் ஆஃப் சினிமா மற்றும் கலாச்சார கதை விருது வழங்கப்பட்டது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  நடிகர்களுக்கு சுங்க வரி பிரச்சனை வருவது ஒன்றும் புதிதல்ல. நடிகர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று அல்லது வெளி நாடுகளில் இருந்து ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வர்.  சுங்க வரி காட்டாமல் வழக்குகளுக்கு ஆளாவர். இப்பொது சிக்கியது ஹிந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் தான்.

  நடிகர் ஷாருக்கான் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவரும் அவருடன் வந்தவர்களும் அணிந்திருந்த ஆடம்பர கைக்கடிகாரங்களுக்கு சுங்க வரி செலுத்தும் விவகாரத்திற்காக காத்திருக்க வேண்டி இருந்தது.

  விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் ₹ 6.83 லட்சத்தை சுங்க வரி செலுத்த வேண்டும் என்று சுங்க வரித்துறையினரால் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

  கான் நவம்பர் 11 அன்று  ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி 2022 இல் கலந்து கொண்டார். அங்கு சர்வதேச சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக அவருக்கு குளோபல் ஐகான் ஆஃப் சினிமா மற்றும் கலாச்சார கதை விருது வழங்கப்பட்டது

  இதையும் படிங்க:  நடிகர் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு… விதிகளை மீறி கார் பேரணி நடத்தியதால் நடவடிக்கை

  பாலிவுட் நட்சத்திரம் ஷார்ஜாவில் நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். மும்பை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் தனியார் ஜெட் விமானத்தில் வந்திறங்கிய கானும் அவருடன் வந்தவர்களும் முனையத்திலிருந்து வெளியேறும் போது சாமான்களில் சொகுசு கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

  ஷாருக்கான் சாமான்களில் சுமார் ₹ 18 லட்சம் மதிப்புள்ள ஆறு ஆடம்பர கடிகாரங்களுக்கான பேக்கேஜிங் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . அவற்றிற்கான சுங்க வரி செலுத்தவே நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

  தகவல்களின்படி, ஷாருக் கான் மற்றும் அவரது மேலாளர் மட்டும் சுங்க வரித்துறையின் சம்பிரதாயங்களை முடித்தவுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​​​​அவரது பாதுகாவலர் உட்பட அவருடன் கோடா வந்தவர்கள் அனைவரும் நேற்று  காலையில் தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Import duty, Shah rukh khan