முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்... கோபத்தைக் காட்டிய ஷாருக்கான்...

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்... கோபத்தைக் காட்டிய ஷாருக்கான்...

மகன்களுடன் ஷாருக்கான்

மகன்களுடன் ஷாருக்கான்

ஆர்யன் ஷாருக்கைப் பிடித்துக் கொள்ள, அவர் அப்ராமை நெருக்கமாகப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

தன்னுடன் ஃபோட்டோ எடுக்க முயன்ற ரசிகரிடம் கோபத்தைக் காட்டியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

மும்பை விமான நிலையத்தில் தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகரால் ஷாருக்கான் மகிழ்ச்சியடையவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை, ஷாருக்கான், ஆர்யன் கான் மற்றும் அப்ராம் கான் ஆகியோர் விமான நிலையத்தில் காணப்பட்டனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மகன்கள் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இணையத்தில் வெளியான படங்களில், ஷாருக்கான் கருப்பு ஜாக்கெட், வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் ப்ளூ டிராக் பேன்ட் அணிந்திருந்தார். ஆர்யன் நீல நிற டி-ஷர்ட் மற்றும் பிரெளன் பேண்ட் அணிந்திருந்தார். அபிராம் சிவப்பு நிற உடையில் இருந்தார். படங்களில், ஆர்யன் ஷாருக்கைப் பிடித்துக் கொள்ள, அவர் அப்ராமை நெருக்கமாகப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது.

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகும் பிரபல யூ-ட்யூபர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது ஒரு ரசிகர் ஷாருக்கானுடன் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயன்றார். இது அவருக்கு பிடிக்கவில்லை. தனது கையை அசைத்துவிட்டு பின்னால் நகர்ந்த ஷாருக்கான், அந்த நபரிடம் கோபத்தைக் காட்டினார். அப்போது அப்பா ஷாருக்கானை அமைதிப்படுத்த முயன்றார் மகன் ஆர்யன் கான்.

First published:

Tags: Shah rukh khan