நடிகர்கள் டைகர் ஷெராப், ஹ்ரித்திக் ரோஷன் போன்று தான் சிறந்தவர் இல்லை என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வரவிருக்கும் படமான பதான் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் குறித்த செய்தி தான் தற்போது ஊடகத்திலும், இணையத்திலும் ட்ரெண்டிங். ஷாருக் கடைசியாக திரைப்பட இயக்குநர், ஆனந்த் எல் ராயின் ஜீரோ படத்தில் நடித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பில் பதான் படம் வெளியாகிறது. ஜீரோ வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. சமீபத்தில் ஜீரோவின் தோல்வியைப் பற்றி மனம் திறந்த ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா மற்றும் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் பதான் படத்தில் நடிக்க தன்னை எவ்வாறு சமாதானப்படுத்தினார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொஞ்சம் பலவீனமாக இருந்தேன், சில காயங்களும் இருந்தன. ஆனால் நான் இதுவரை செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும், அதற்கு ஃபிசிக்கலி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என் நண்பர் ஆதித்யா சோப்ரா மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோரிடம், ‘ஒரு ஆக்ஷன் படம் பண்ணலாம்’ என்று சொன்னேன். ஆனால் அவர்கள் என்னிடம், ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மிகவும் டயர்டாக இருக்கிறீர்கள்’ என்றனர். குறைந்தபட்சம் முயற்சி செய்யுமாறு நான் அவர்களிடம் கேட்டேன். ”நான் டைகர் (ஷ்ராஃப்) அல்லது டுக்கு (ஹிருத்திக் ரோஷன்) போல சிறந்தவனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்” என்று கூறியதாக ஷாருக்கான் தெரிவித்தார்.
150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!
ஆரம்பத்தில் உடல் ஃபிட்டாக இருக்க, ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார் ஷாருக்கான். "ஜீரோ படத்துக்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது, பின்னர் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. யாரும் அதை விரும்பவில்லை. அப்போது நான் மோசமாக உணர்ந்தேன். அதன்பிறகு, மக்கள் விரும்பும்படி (நான் செய்ய விரும்பியது போதும்) ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுடனான உரையாடலில் ஷாருக்கான் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shah rukh khan