இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக விளங்குபவர்கள் எல்லாரும் தனக்கென ஒரு ஸ்டைல், தனக்கென ஒரு ட்ரெண்டை நிலைநிறுத்தி வைத்துள்ளனர். தமிழுக்கு எப்படி ரஜினிகாந்தோ அப்படி ஹிந்தி சினிமாவுக்கு ஷாருக் கான். எவ்வளவு வயதானாலும் துடிப்பு குறையாமல், இளைஞர்களுக்கே சவால் விட்டு கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவரது பதான் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. அதெல்லாம் ஓய்ந்த நிலையில் பதான் விழாவில் அவர் அணிந்திருந்த கடிகாரம் நெட்டிசன்களிடையே ஒரு பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அதன் விலைதான்.
பதான் விழாவிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை நடிகை தீபிகா படுகோன் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் தினசரி காலை செய்யும் தோல் பராமரிப்பு பற்றி பேசுகின்றனர். வீடியோவில், ஷாருக் ஒரு வெள்ளை டி- சட்டை மற்றும் நீல கைக்கடிகாரம் அணிந்திருப்பதை பார்க்க முடிந்தது. அந்த நீல நிற கடிகாரம் நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஷாருக் கான் அணிந்த வாட்ச் என்றால் அதை யார் தான் கவனிக்க மாட்டார்கள்? அந்த வாட்ச் குடித்து இணையம் முழுக்க தேடுதல் வேட்டை தொடங்க, ஒரு சிலர் பேஷன் பிளாக்கர் டயட் சப்யாவிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலில் தான் ரசிகர்கள் அனைவரும் உறைந்துவிட்டனர்.
அந்த கடிகாரம் ஆடெமர்ஸ் பிகுவெட்டிடம் இருந்து வந்தது என்று அவர் பதில் அளித்திருந்தார். டயட் சப்யா பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டின்படி, ராயல் ஓக் பெர்பெச்சுவல் காலண்டர் வாட்ச், ₹4.98 கோடி மதிப்புடையது. இணையதளம் Chrono24 இன் படி, இந்த மாடல் கடிகாரங்கள் ₹4.7 கோடிக்கு விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5 கோடிக்கு ஒரு கைக்கடிகாரமா? என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்
அதற்காக இணையத்தை அலசும்போது இது நீல நிற செராமிக் பொருளால் செய்யப்படுவதும், நேரம் காட்டும் முட்கள் வெள்ளை தங்கத்தை வைத்து செய்யப்படுவதும் தெரிந்தது. நேரத்தோடு மாதம் , நாள், தேதி குறிப்பிடும் சப் டயல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் ஆடம்பர உடமைகளில் தற்போது இந்த கடிகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் கடலை நோக்கி அமைந்திருக்கும் 26, 328.52 சதுர அடி. பரப்பளவு கொண்ட ஷாருக் கானின் மன்னத் வீடு மட்டும் 200 கோடி மதிப்பு கொண்டது. அதேபோல பிஎம்டபிள்யூ 6 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி மற்றும் பிற கார்களையும் ஷாருக் வைத்துள்ளார்.
View this post on Instagram
சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட சந்திப்பின் போது தனது ரசிகர்களை ஐந்து நட்சத்திர விடுதியில் விருந்து வைத்து சந்தித்துள்ளார். இதையெல்லாம் கணக்கு போட்டால் கணக்கு எகிறுகிறது. ஷாருக்கான் அடுத்ததாக அட்லீயின் ஜவான் படத்திலும், ராஜ்குமார் ஹிரானியின் டுங்கி படத்திலும் நடிக்கிறார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shah rukh khan, Viral News, Viral Video