ஹோம் /நியூஸ் /entertainment /

நடிப்பு வேண்டாம்.. ஆனால் சினிமா வேண்டும் - திரைக்கதையில் ஜொலிக்க விரும்பும் ஷாருக் மகன்!

நடிப்பு வேண்டாம்.. ஆனால் சினிமா வேண்டும் - திரைக்கதையில் ஜொலிக்க விரும்பும் ஷாருக் மகன்!

ஆரியன் கான்

ஆரியன் கான்

ஷாருக்கான் மகன் ஆரியன்கான் தனது சினிமா கரியரை ஆரம்பிக்க உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  பாலிவுட்  சூப்பர் ஸ்டாரான ஷாருகானின் மகன் ஆரியன் கான். ஷாருக்கான் மகன் ஆரியன்கான் தனது சினிமா கரியரை ஆரம்பிக்க உள்ளார். ஆனால் அவர் தந்தை போல கேமரா முன் இல்லாமல் கேமராவின் பின்னால் வேலை செய்ய முடிவெடுத்து உள்ளார்.

  நீண்டகாலமாக ஆரியன் கான் எழுத்தாளராக சினிமாத் துறையில் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார். வெளியான தகலின்படி, ஷாருக்கான்தான் மகன் ஆரியன் கானை இஸ்ரேலிய இயக்குனர் லியோர் ராஸ்விடம் பயிற்சி செய்ய வைத்துள்ளார். Fauda என்ற  தொடரின் இயக்குனர் தான் லியோர் லியோர் ராஸ்.

  இது குறித்து வெளியான தகவலின்படி, ஆர்யன்கான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை திரைக்கதையாளராக தொடங்கி பின்னர் இயக்குநராக ஆக செல்ல வேண்டுமென திட்டமிட்டிருப்பதாகவும். இயக்குநர்தான் ப்ளான் என்றும் கூறப்படுகிறது.

  ஆரியன்கான் தற்போது ரெட் சில்லிஸ் தயாரிப்பின் தொடர்களுக்காக திரைக்கதை எழுதி வருகிறார். ரெட் சில்லிஸ் உள்ள எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.அதில் ஒருவர் தன லியோர் ராஸ். இந்த தொடருக்கான வேலைகள் தொடங்கி விட்டது. இந்த வருட இறுதிக்குள் வெப் தொடரின் வேலைகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Aryan Khan (@___aryan___)  பல நடிகை நடிகர்கள் இந்த தொடரில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான ஆடிஷன் நடைபெற்று வருகிறது என்ற தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Aryan Khan (@___aryan___)  Read More: நடிகர் ஆர்யா – முத்தையா இணையும் படத்தின் ஷூட்டிங் நாளை தொடக்கம்…

  இதனிடையே ஆரியன் கான் மாதுரி தீட்சித்யின் 'மஜா மா' பாட வெளியீட்டு விழாவில் காணப்பட்டார்.ஆரியன் கான் உடன் அவர் தங்கை சஹானா கானும் இருந்துள்ளார்.

  ஆரியன் கான் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்னின் முத்த மகன். 25 வயதான ஆர்யன் கானுக்கு ஒரு தங்கை ஒரு தம்பி இருக்கிறார்கள். ஆரியன் கான் கலிபோர்னியாவில் உள்ள பல்கலை கழகத்தில் திரைப்படம் எடுப்பது பற்றி படித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bollywood, Shah rukh khan