ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கே.ஜி.எஃப் 2 வசூலை முறியடித்த ஷாருக்கானின் பதான்! வசூலை வாரிக்குவிக்கும் சூப்பர் ஸ்டார்!

கே.ஜி.எஃப் 2 வசூலை முறியடித்த ஷாருக்கானின் பதான்! வசூலை வாரிக்குவிக்கும் சூப்பர் ஸ்டார்!

ஷாருக்கான்

ஷாருக்கான்

கே.ஜி.எப் 2 படத்தின் சாதனையை முறியடித்து, பெருந்தொற்றுக்குப் பிறகான இந்திய திரைப்பட முன்பதிவில் வெற்றிக்கொடி நாட்டியது பதான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கானின் பதான் முன்பதிவு வசூல் கே.ஜி.எஃப் 2-வை மிஞ்சியுள்ளது. நான்கு வருட காத்திருப்புக்குப் பிறகு நேற்று ஷாருக்கானை மீண்டும் திரையில் பார்த்தனர் ரசிகர்கள். பதான் திரைப்பட ரிலீஸ் பாலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக இருந்தது. அதிகாலை காட்சிகளுக்காக தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள், உடன் பெரிய போஸ்டர்கள் மற்றும் கேக்குகளையும் கொண்டு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தியேட்டர்களுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்தனர். எதிர்பார்த்தது போலவே பதான் வசூலில் கலக்கியது, அதாவது இப்படம் கேஜிஎஃப் 2 வசூலை மிஞ்சியது.

ஜனவரி 26-ஆம் தேதியான நேற்று வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பியது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இப்படம் முன்பதிவு வசூலில் சாதனை படைத்தது. கே.ஜி.எப் 2 படத்தின் சாதனையை முறியடித்து, பெருந்தொற்றுக்குப் பிறகான இந்திய திரைப்பட முன்பதிவில் வெற்றிக்கொடி நாட்டியது பதான்.

”பதான் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, புதிய முதல் நாள் சாதனையைப் படைத்து வரலாறு படைத்துள்ளது. இந்தியில் மட்டும் சுமார் 53-54 கோடி மற்றும் தென்னிந்திய மொழிகளில் 1 அல்லது 1.50 கோடி வசூலித்ததாக தெரிகிறது” என பாக்ஸ் ஆபிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் பதான் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Deepika Padukone, Shah rukh khan