முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இறங்கி அடிக்கும் ஷாருக்கான்: 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்த 'பதான்' - புதிய சாதனை

இறங்கி அடிக்கும் ஷாருக்கான்: 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்த 'பதான்' - புதிய சாதனை

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு காரணமாக  திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியாகியிருந்து. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் ஹீரோவாக நடித்து பதான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இடையில் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்', 'லால் சிங் சத்தா', 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட படங்களில் சிறப்பு வேடங்களில் தோன்றினார்.

கடந்த 25 ஆம் தேதி நாடு முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியான பதான் திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தப் படம் வசூல் சாதனை படைத்துவருகிறது. கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளால் சரிவிலிருந்த பாலிவுட் திரையுலகை மீட்கும் விதமாக 'பதான்' படத்தின் வெற்றி அமைந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

படத்தில் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் காட்சிகள், ஜான் ஆபிரஹாமின் அதிரடி நடிப்பு, சல்மானின் சிறப்புத் தோற்றம் என ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் படம் ஹிந்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்திய 'பாகுபலி', 'கேஜிஎஃப்' படங்களின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு காரணமாக  திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் இந்தப் படம் 4 நாட்களில் ரூ.200 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Shah rukh khan