கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஷாருக்கானும் தீபிகா படுகோனும் நடனமாடும் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பாடலில் தீபிகா படுகோன் காவி வண்ணத்தில் பிகினி உடையும், ஷாருக்கான் பச்சை வண்ணத்தில் உடை அணிந்திருப்பதாகவும் கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என ட்விட்டரில் Boycott Pathaan என்ற ஹேஷ்டேக் டிரண்டானது.
மேலும் இதனை நீக்காவிடில் படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிப்பதா இல்லையா என முடிவெடுக்க வேண்டிவரும் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க : YearEnder 2022: இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள்!
இந்த நிலையில் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நாளில் ஷாருக்கான் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஷாருக் பதான் பட சர்ச்சைக்கு பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக பதிலளித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, ''குறுகிய பார்வையினால் சமூக ஊடகங்கள் இயங்குகிறது. எதிர்மறையான பார்வை சினிமாவை பாதிக்கிறது. இப்பொழுது சினிமா இன்னும் முக்கியமான வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது என நான் நம்புகிறேன். மேலும் எதிர்மறையான பார்வை அதிகரிக்கும் அதே வேளையில் அதன் விற்பனை மதிப்பும் உயர்வதாக எண்ணுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Deepika Padukone, Shah rukh khan