முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'மகிழ்விக்கவே சினிமா' பதான் புறக்கணிப்பு குறித்து மெளனம் கலைத்த ஷாருக்கான்!

'மகிழ்விக்கவே சினிமா' பதான் புறக்கணிப்பு குறித்து மெளனம் கலைத்த ஷாருக்கான்!

ஷாருக்கான்

ஷாருக்கான்

நம்மில் எவருக்கும் யாருடனும், எந்த கலாச்சாரத்துடனும் அல்லது வாழ்க்கையின் எந்த அம்சத்துடனும் வேறுபாடுகள் இல்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் படம் வெளியாகி சில நாட்கள் கழிந்த நிலையில், பதான் புறக்கணிப்பு ஹேஷ்டேக்குகளைப் பற்றி பேசியுள்ளார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், படத்தின் வெற்றியைப் பற்றி பேசுகையில், பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை கூற விரும்புவதாகக் கூறினார். திரைப்பட இயக்குநர்கள் செய்வது நல்ல மற்றும் கெட்ட வேலை என எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒரே நோக்கம் பொழுதுபோக்கு தான் என்றார்.

"மகிழ்ச்சியை பரப்புவதற்காக திரைப்படங்களை உருவாக்குகிறோம். நல்லது கெட்டது என நாம் தவறுகளையும் செய்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் திரைப்படங்களைத் தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள நமது நோக்கம் தெளிவாக உள்ளது. நான் கெட்டவனாக நடித்தாலும் மகிழ்ச்சி, அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்ப விரும்புகிறேன். நாங்கள் யாரும் கெட்டவர்கள் அல்ல, உங்களை மகிழ்விப்பதற்காக நாங்கள் அனைவரும் கதாபாத்திரங்களில் நடிக்கிறோம்.

படத்தில் உள்ள விஷயங்களைச் சொன்னால், எந்த ஒரு உணர்வும் யாரையும் புண்படுத்தும் வகையில் இல்லை. இது வெறும் பொழுதுபோக்கு. நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம், கிண்டல் செய்துக் கொள்கிறோம். கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை அப்படியே விட வேண்டும். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இவர் தீபிகா படுகோனே, அவர் அமர். நான் ஷாருக்கான், நான் அக்பர், இவர்தான் அந்தோணி ஜான். இதுதான் சினிமாவை உருவாக்குகிறது. அமர், அக்பர் மற்றும் அந்தோணி... நம்மில் எவருக்கும் யாருடனும், எந்த கலாச்சாரத்துடனும் அல்லது வாழ்க்கையின் எந்த அம்சத்துடனும் வேறுபாடுகள் இல்லை. நாங்கள் உங்களை நேசிக்கிறோம், அதனால் தான் படம் நடிக்கிறோம்.

நம் படங்களின் மீது நமக்குக் கிடைக்கும் அன்பை விட சிறந்தது எதுவுமில்லை. நாம் நவீன வழிகளில் கதையைச் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஐந்தே நாட்களில் உலகளவில் ரூ.500 கோடி வசூல் சாதனை படைத்தது பதான். இப்படம் அதன் தொடக்க வார இறுதியில் பல சாதனைகளை முறியடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan