அட்லியின் ஷாருக்கான் படம் - கஸ்தூரி வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அட்லியின் ஷாருக்கான் படம்

அரசியல், சமூகம் என அனைத்த விஷயங்களிலும் தனது கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு வரும் நடிகை கஸ்தூரி இப்போது படங்களின் அப்டேட்டையும் தர ஆரம்பித்திருக்கிறார்.

 • Share this:
  அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் குறித்த அப்டேட்டை நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார்.

  முதல் படம் ராஜா ராணிக்குப் பிறகு தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக விஜய் படங்களை இயக்கிய அட்லி அடுத்து இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அட்லி சொன்ன கதை ஷாருக்கிற்குப் பிடித்துப்போக, அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

  இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், ஷாருக்கான் படம் குறித்து நடிகை கஸ்தூரி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில் அவர், ஷாருக்கான் படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும், ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறியுள்ளார். ஒரே படத்தில் தனது பேவரிட் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது உண்மையானால், நயன்தாரா நடிக்கும் முதல் இந்திப் படமாக இது இருக்கும்.

  ALSO READ |  'நான் கழுத்தில் அணிந்திருப்பது 108 பேரின் இடுப்பு எலும்பு' - வைரலாகும் இயக்குநர் பாலாவின் பழைய வீடியோ

  அரசியல், சமூகம் என அனைத்த விஷயங்களிலும் தனது கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு வரும் நடிகை கஸ்தூரி இப்போது படங்களின் அப்டேட்டையும் தர ஆரம்பித்திருக்கிறார். நயன்தாரா ரசிகர்களுக்கு இது நற்செய்தி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: