ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை ரசிகர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்த ஷாருக்கான்!

சென்னை ரசிகர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்த ஷாருக்கான்!

ரசிகர்களுடன் ஷாருக்கான்

ரசிகர்களுடன் ஷாருக்கான்

ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மும்பை சென்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜவான் படப்பிடிப்பை முடித்த ஷாருக்கான் சென்னை ரசிகர்களுக்கு இரவு உணவு அளித்திருக்கிறார். 

    ”எனது ரசிகர்கள் எனது சிறந்த நண்பர்கள். என் வாழ்க்கையில் நண்பர்கள் இல்லாத குறையை அவர்கள் ஈடு செய்கிறார்கள். அவர்கள் என்னை நிபந்தனையின்றி என்னை நேசிக்கிறார்கள்” என்று ஷாருக்கான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

    உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களால் போற்றப்படும் நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் ஈத் மற்றும் அவரது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், ரசிகர்கள் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்கு வெளியே கூடுவார்கள்.

    சமீபத்தில் அவர் நேரம் ஒதுக்கி சில ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் சென்னை அட்டவணையை சமீபத்தில் முடித்தார் ஷாருக்கான். ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மும்பை சென்றார்.

    மற்றொரு நடிகையை தனியாக வீட்டுக்கு அழைத்த அர்னாவ்? லீக்கான ஆடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக சனிக்கிழமை சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது ரசிகர்கள் 20 பேரை அழைத்து அவர்களுடன் தனித்தனியாக நேரம் செலவிட்டு படங்கள் எடுத்துக் கொண்ட ஷாருக்கான், அவர்களுக்கு இரவு உணவு அளித்திருக்கிறார்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Shah rukh khan